கருத்துவேறுபாடு இருந்தாலும் இறுதி இலக்கு ஒன்றே - அமைச்சர் அளித்த விளக்கம்
அரசாங்கத்திற்குள் எந்தவித முரண்பாடுகளும் இல்லை எனவும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், இறுதி இலக்கு ஒன்றுதான் எனவும் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க(CP Ratnayake) தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஒரு கூட்டணியில் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் எதேச்சதிகாரப் போக்குகளைக் கொண்டிருக்கும் போது, ஒரு கட்சியின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நடுத்தர மட்டத்தை பின்பற்றும் இடதுசாரி கட்சிகள் யாரையும் விமர்சிக்கலாம். ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்க முடியும் ஆனால் ஒரே இறுதி இலக்கையும் கொண்டிருக்க முடியும்.
2022 வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பொது மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் , நாளை வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாடற்ற விலைகள் குறையும் என்றார்.