முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு குறித்து எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே வெளியிட்ட கருத்து குறித்து பதிலளிக்கும் போதே அமைச்சர் ஜெயதிஸ்ஸ இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
தொழிற்கல்வி
பாடசாலையிலிருந்து விலகியவர்கள் அல்லது க.பொ.த (உயர் தர) பரீட்சைக்குப் பிறகு கல்வியைத் தொடராத இளைஞர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பல்வேறு யோசனைகள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த யோசனைகளில் சில திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |