உலகில் தங்கமே இல்லாத நாடுகள் எவை தெரியுமா...!
உலகளாவிய ரீதியில் சில நாடுகள் அதிக தங்கத்தை அதன் சொத்தாக கொண்டுள்ளன.
இதன்படி, உலகின் 60 வீதத்துக்கும் அதிகமான நாடுகள் அதிக தங்கத்தை வைத்திருக்கின்றன.
எனினும், தங்கம் இல்லாத அல்லது சிறிய வீதத்தில் தங்க கையிருப்பை கொண்டுள்ள நாடுகளும் உள்ளன.
தங்கம் இல்லாத நாடுகள்
உலக தங்க சபையின் தரவுகளுக்கமைய, தங்க கையிருப்பு இல்லாத 13 நாடுகள் உள்ளன.
இதன்படி, நிகரகுவா, கேமரூன், ஆர்மீனியா, காபோன், துர்க்மெனிஸ்தான், காங்கோ, சாட் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகள் தங்கமே இல்லாத நாடு என பெயரிடப்பட்டுள்ளன.
குறைந்தளவான தங்க கையிருப்பு
அத்துடன், கோஸ்ட்டா ரிக்கா, அசர்பைஜான், குரோவாசியா, நோர்வே மற்றும் கனடா ஆகிய நாடுகள் மிக குறைந்தளவாக தங்க கையிருப்பை கொண்டுள்ள நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.
அதிக தங்கத்தை கொண்ட நாடாக கோஸ்ட்டா ரிக்கா கடந்த 1930 ஆம் ஆண்டில் திகழ்ந்தாலும், அதன் பின்னர் அந்த நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தங்க கையிருப்பு முற்றிலும் இல்லாது போயுள்ளது.
இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் எழுச்சி கண்டுள்ள கோஸ்ட்டா ரிக்கா, 7.57 பில்லியன் டொலர் தங்கத்தை கையிருப்பில் கொண்டுள்ளது.
மேலும், 8.31 பில்லியன் டொலர் தங்கத்தை அசர்பைஜானும், 28.31 பில்லியன் டொலர் தங்கத்தை குரோவாசியாவும் தற்போது கையிருப்பில் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |