தலதா மாளிகை குண்டுவெடிப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை - மல்வத்து மகாநாயக்க தேரர் தெரிவிப்பு
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மீது ஜே.வி.பி.யினர் குண்டுத் தாக்குதல் நடத்தவில்லை எனத் தெரிவித்துள்ள மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர், இந்த விவகாரம் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பிரதிநிதிகள் குழுவினர் நேற்று மல்வத்து மகாவிகாரைக்குச் சென்று மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மகாநாயக்க தேரர்,
தேவையற்ற சர்ச்சைகள்
“அந்தத் தரப்பினர்தான் குண்டு வைத்தார்கள் என்று எவ்வாறு கூற முடியும்? காவல்துறையினரிடமிருந்த துப்பாக்கி திருடப்பட்ட சம்பவமே இடம்பெற்றது.

பிறந்தநாள் கேக் வெட்டி, மதுபானம் அருந்தி போதையில் இருந்தபோது செய்த செயலே அது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ஜே.வி.பி.யினர் தலதா மாளிகைக்குக் குண்டு வைத்ததாகப் பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம்.
தங்கக் கரண்டுவ விவகாரத்திலும் எந்தத் தவறும் இடம்பெறவில்லை.
பழைய கரண்டுவ அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாகப் புதிய தங்கக் கரண்டுவ சிறப்பாகத் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
பழைய கரண்டுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |