வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! வழமைக்கு திரும்பிய இணையத்தளம்
சைபர் தாக்குதலுக்கு இலக்காகி தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் மீண்டும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இணையவழி நேர ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாகனப் போக்குவரத்துச் சேவைகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களையும் இணையத்தளத்தின் ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இணையத்தளம்
இணையத்தளச் சேவைகள் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதால், இதுவரை பொதுமக்கள் எதிர்கொண்டுவந்த அணுகல் தடைகள் நீங்கியுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழமைபோன்று பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |