தருமபுரி வள்ளலார் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவீரர் நிகழ்வு!
Sri Lankan Tamils
Tamils
Thol. Thirumavalavan
By Shalini Balachandran
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் இன்று (27-11-2026) வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் தமிழ்நாட்டின் தருமபுரி வள்ளலார் திடலில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
ஈழம் வெல்லும் - அதனை காலம் சொல்லும் என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டு ஈகச்சுடரேற்றி மாவீரர் நாள் உரையாற்றவுள்ளார்.
இந்த முக்கிய நிகழ்வு மற்றும் தலைவர் தொல். திருமாவளவனின் உரை நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.
இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி