கண்கலங்க வைக்கும் நினைவுகள்..! தேசத்தின் விடியலுக்காக நடந்த தியாகங்கள்
மண்ணுக்காகவும் இனத்தின் விடிவிற்காகவும் தம் வாழ்வையே அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூறும் விதமாக தமிழர் தாயகங்கள் முற்றிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ள பொதுமக்கள் உயிர் நீத்த உறவுகள் குறித்தும் மற்றும் தமிழ் மக்களின் வரலாற்று பாதை குறித்தும் தமது உணர்வுபூர்வமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள்,
“வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் மாத்திரம் இனத்திற்காக போராடவில்லை.
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 23 மாவட்டங்களை பிறப்பிடமாக கொண்டவர்கள் மண்ணின் விடுதலைக்காக இங்கு போராட்டியுள்ளனர்.
இது மட்டுமன்றி வெளிநாடுகள் உட்பட தமிழ், முஸ்லிம் மற்றும் இந்திய பிரஜைகள் என நிறைய மக்கள் இங்கு மண்ணிற்காக போராடியுள்ளனர்.” என தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |