மன்னாரில் மாவீரர் தின பதாகை மற்றும் கொடியுடன் இளைஞர் கைது
(நயன்)
மாவீரர் தின பதாகை ( பேனர் ),விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடி ஆகியவற்றுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று இரவு மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் தின பதாகை (பேனர்) ஒன்றை எழுத்தூர் பகுதியில் வீதிக்கு அருகில் காட்சிப்படுத்திய நிலையில் குறித்த இளைஞர் வீதியால் பயணித்துள்ளார்.
விசாரணை
இந்நிலையில் காவல் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த நபர் தடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் அவரது உடமையில் இருந்து மாவீரர் தின பதாகை (பேனர் ) மற்றும் விடுதலை புலிகள் அமைப்பின் கொடி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |