யாழ். வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மாவீரர் நினைவேந்தல்
வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று (27) வெள்ளிக்கிழமை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
வழக்கமாக நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் மாவீரர்களை நினைவுகூரும் வாரம் ஆரம்பிக்கப்பட்டு 27ஆம் திகதி நிறைவடையும்.
அந்தவகையில் வடக்கு,கிழக்கில் இம்முறை நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு
அந்தவகையில் யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை, தீருவில் சதுக்கத்தில் நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

தீருவில் சதுக்கம் சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வில், மாலை 6.05 மணிக்கு நினைவொலி எழுப்பப்பட்டுப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |