பொதுமக்களே அவதானம் – வட்டுவாகல் பாலம் தொடர்பான முக்கிய அறிவித்தல்
வட்டுவாகல் பாலத்தின் ஊடாகப் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்புடனும் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
குறித்த விடயத்தை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத்து மற்றும் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பால நிர்மாணப் பணிகளைக் கருத்திற்கொண்டு, நந்திக்கடல் முகத்துவாரத்தை வெட்டி நீரை வெளியேற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம்
இருப்பினும், முகத்துவாரத்தை வெட்டித் திறப்பதன் மூலம் நீர்மட்டம் மிக விரைவாகக் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் அபாயகரமான அளவிற்கு உயரவில்லை.
குறிப்பாக, பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதிகளில் அவதானமாகச் செயற்படுவதுடன், நீரின் ஓட்டம் மற்றும் போக்குவரத்து நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பயணிக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |