தமிழர் தாயகமெங்கும் நினைவேந்தல் - புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு
தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பகுதியில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி முழுமையான கதவடைப்பை மேற்கொண்டு இன்றையதினம் (27.11.2026) மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மாவீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததுடன், வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.
மக்கள் அஞ்சலி
வருடந்தோறும் நடைபெறும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இம்முறையும் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

இதனால் புதுக்குடியிருப்பு நகரப் பகுதி வர்த்தக நடவடிக்கைகளின்றி அமைதியான சூழலில் காணப்பட்டதுடன், மாவீரர்களை நினைவுகூரும் வகையில் மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதேவேளை, தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றையதினம் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |