சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சுமதிபால லியானஆரச்சி ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த இருவரையும் டிசம்பர் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை வழங்கிய கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் (CIABOC), விசாரணைகளை விரைந்து முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்தார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு
பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடமிருந்து 8.4 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த இரு சந்தேக நபர்களும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த இருவரையும் டிசம்பர் 11ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதாரகம உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |