இலங்கையின் நிறுவனச் சட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்
இலங்கையில் தீவிரவாதத்திற்கு நிதி வழங்குவது பொதுவாக நடந்துவந்துள்ளதுடன், இப்போது அதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.சரத் குமார தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறியதாவது, "இலங்கையின் நிறுவனச் சட்டம், நியூசிலாந்து மற்றும் கனடாவின் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஊழலான ஆட்சி அமைப்புகள்
இருப்பினும், நாம் தற்போது அந்தச் சட்டத்தில் முன்னேற்றங்களை கண்டுள்ளோம். இந்த திருத்தச்சட்டம், அந்த வளர்ச்சியை மேலும் விரிவாக்கும் நோக்குடன் முன்வைக்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில், தீவிரவாதத்தையும் அதற்கான நிதியுதவிகளையும் தடுக்கும் பரிந்துரைகளை வழங்கும் ஒரு நிறுவனமானது, உலக நாடுகளுக்கு 40 பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அவற்றில் 39 பரிந்துரைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. ஆனால், சில ஊழலான ஆட்சி அமைப்புகள் தப்பிக்கவேண்டுமென்ற நோக்கில் 24வது பரிந்துரையை நடைமுறைப்படுத்தவில்லை.
நமது அரசு அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்.இனிமேல் நிறுவனங்களின் இறுதி நன்மையை பெறும் உரிமையாளர்கள் யார் என்பதை வெளியிட வேண்டும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
