உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: இந்திக அனுருத்த உறுதி

Sri Lanka Minister of Energy and Power Landslide In Sri Lanka
By Sathangani Apr 30, 2024 10:54 AM GMT
Report

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தினால் மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை. மழையுடன் ஏற்படும் சிறிய நீரூற்றுக்களை காண்பித்து மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் (Indika Anuruddha Herath) தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்திக அனுருத்த இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த,

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகள்: மஹ்தி விசனம்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகள்: மஹ்தி விசனம்

587 மில்லியன் டொலர்கள் இழப்பு

''உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நிறைவு செய்வதில் 09 வருடங்கள் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக நாட்டுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 09 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பு 587 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப மதிப்பீடு 529 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டது.

உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: இந்திக அனுருத்த உறுதி | No Problem By Uma Oya Multipurpose Develop Project

ஆனால் கடந்த 09 வருடங்களில் உமா ஓயா திட்டத்தின் ஊடாக மின்சார உற்பத்தி மேற்கொண்டு அதனை தேசிய கட்டமைப்பில் சேர்க்க முடியாமல் போனதால் இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகைக்கு நிகரான இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

அத்துடன் உமா ஓயா திட்டத்தின் மூலம் மின்சார உற்பத்தியை தேசிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறி மக்களை தவறாக வழிநடத்தும் ஊடக நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிகிறது.

மழைக்கு பின் தோன்றும் சிறிய அருவிகளை காட்டி இந்த வளர்ச்சி திட்டத்தை சீர்குலைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த திட்டத்துடன் தொடர்புடைய மண்சரிவு அல்லது வேறு எந்த சம்பவமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்தானந்தவிற்கு எதிரான பண மோசடி வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மகிந்தானந்தவிற்கு எதிரான பண மோசடி வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

நிலக்கரி மின் உற்பத்தி நிலையம்

எவ்வாறாயினும், உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க்கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நாளை (01) பூகற்பவியலாளர்கள் குழுவொன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கெல்லாம் தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகள் உள்ளன என்பதை அரசாங்கம் என்ற வகையில் நாங்களும் பொறுப்புடன் கூறுகிறோம். அப்படி இருந்தால், அதை எப்படி தடுப்பது என்பது பற்றிய அனுபவம் உலகம் முழுவதும் உள்ளது.

உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: இந்திக அனுருத்த உறுதி | No Problem By Uma Oya Multipurpose Develop Project

கடந்த காலங்களில் சிலரின் நாசவேலைகளால் நாடு இவ்வாறான பல அபிவிருத்தித் திட்டங்களை இழந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைக்க முன்மொழியப்பட்டது, ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகளால் அது இழக்கப்பட்டது. மேலும், கெல்வரபிடிய எல்.என்.ஜி (LNG) ஆலை மற்றும் பல்வேறு சிறிய மின் உற்பத்தி நிலையங்கள் போராட்டங்கள் மூலம் இழக்கப்பட்டன.

இவ்வாறாக பொதுமக்களை அச்சுறுத்தும் மற்றும் தூண்டிவிடக்கூடிய செய்திகள் மூலம் பல அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டிற்கு இல்லாமல் போய்விட்டன. எனவே, உண்மை தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும், மின்சார உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் இருந்து பெறுவது என்ற கொள்கை முடிவை எங்கள் அரசாங்கம் எட்டியுள்ளது. நீர், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் நிலையங்கள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பக்கவிளைவை ஏற்படுத்தும் கோவிஷீல்டு தடுப்பூசி: ஒப்புகொண்ட நிறுவனம்

பக்கவிளைவை ஏற்படுத்தும் கோவிஷீல்டு தடுப்பூசி: ஒப்புகொண்ட நிறுவனம்

காற்றாலை

மேலும், 10 மெகாவோர்ட்டிற்கு குறைவான காற்றாலை அல்லது சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை விரைவாகப் பெற மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை இணைந்து புதிய திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பெற முடியாவிட்டால், எதிர்காலத்தில் இன்னொரு மின் நெருக்கடி உருவாகலாம்.

உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: இந்திக அனுருத்த உறுதி | No Problem By Uma Oya Multipurpose Develop Project

மேலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரங்களைப் பெற்று ஆலைகளை தொடங்காமல் காலதாமதம் செய்து, அந்த அனுமதிப் பத்திரங்களை அதிக தொகைக்கு ஏனைய தரப்பினர்களுக்கு விற்பனை செய்யும் மாபியாவையும் கண்காணித்து வருகின்றோம்.

எனவே, மின் உற்பத்தி நிலையங்களை விரைவுபடுத்துவதற்கான புதிய திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளோம். அதன்போது புள்ளி முறைமை மூலம் அனுமதி வழங்கி, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சரியான நேரத்தில் விரைவாக சேகரிக்கும் செயற்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 05 முதல் 500 மெகாவோர்ட் வரையிலான மேற்கூரை சோளார் பெனல் திட்டங்களால் கடந்த காலத்தில் மாதத்திற்கு சுமார் 22 மெகாவோர்ட்களை மட்டுமே பெற முடிந்தது.

ஆனால் இந்த நிலை குறித்து முறையான ஆய்வுகளைச் செய்த பிறகு மார்ச் மாதத்துக்குள் அந்த அளவை 40 மெகாவோர்ட்டாக உயர்த்த முடியும்.'' என இந்திக அனுருத்த மேலும் தெரிவித்தார்.

மைத்திரியுடன் இணைந்த விஜயதாஸ ராஜபக்ச: எச்சரிக்கை விடுத்த சந்திரிக்கா

மைத்திரியுடன் இணைந்த விஜயதாஸ ராஜபக்ச: எச்சரிக்கை விடுத்த சந்திரிக்கா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026