இனி சுய-தனிமைப்படுத்தல் இல்லாமல் பிரித்தானியாவுக்குள் நுழையலாம்! அரசாங்கம் புதிய அறிவிப்பு
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பயணிகள் சுய-தனிமைப்படுத்தப்படாமல் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட உள்ளனர்.
உள்ளூர் நேரப்படி திங்கட் கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மீண்டும் ஒன்றிணைக்க உதவும் என்று பிரித்தானிய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது..
மட்டுமின்றி, பிரித்தானியாவில் தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே ஜூலை 19 முதல், அம்பர் நாடுகளிலிருந்து வரும்போது தனிமைப்படுத்தலைத் தவிர்க்க முடியும்.
ஆனால், பிரித்தானியாவுக்கு வெளியே தடுப்பூசி போட்டுக்கொண்டு, நாட்டுக்குள் நுழைய விரும்பும் மக்களுக்கு அதே உரிமைகள் வழங்கப்படவில்லை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மக்கள் விமான பயணத்திற்கு முன்னர் கொரோனா சோதனை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், பிரித்தானியாவுக்குள் நுழைந்த பின்னர் இரண்டாவது நாள் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தற்போது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், எந்த சிக்கலும் இன்றி பிரித்தானியாவில் நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.