ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் விதித்துள்ள தடை
women
afghanistan
taliban
By Sumithiran
ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹைஜாப் அணிய வேண்டும். ஹைஜாப் அணியாத பெண்களை சாரதிகள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது. பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் பெண்கள் நடித்திருக்கும் தொலைக்காட்சி தொடர்களை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி