இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் :இலங்கையை தாக்குமா சுனாமி..! வெளியான அறிவிப்பு
Tsunami
Sri Lanka
Indonesia
Earthquake
By Sumithiran
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவிற்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் இன்று (27) காலை 10:26 மணிக்கு ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத் தகவல் புல்லட்டின் படி, இந்த நிலநடுக்கம் 25 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது, அட்சரேகை 2.68°N மற்றும் தீர்க்கரேகை 96.07°E இல் ஆரம்ப ஆயத்தொலைவுகளுடன் உள்ளது.
கடற்கரையோர மக்களுக்கான அறிவித்தல்
இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்ட தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம், இருப்பினும், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்