தயார் நிலையில் போர் விமானங்கள் : ஹவுதிகள் மீதான தாக்குதல் : மூன்று முறை முடிவை மாற்றிய ட்ரம்ப்
ஏமனின் ஹவுதி கிளர்ச்சி குழு மீதான தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் மூன்று முறை தனது முடிவை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிக்குழு, ஏமனின் சர்வதேச குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு உதவி வரும் சவுதி அரேபியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த தொடங்கியது.
தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற திட்டத்தில் ட்ரம்ப்
இந்த தாக்குதலால் சவுதி அரேபியா சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் பாதுகாப்பில் தனது கூட்டு நாடான அமெரிக்காவின் உதவியை நாட முடிவு செய்தது.

ஏற்கனவே ஈரானுக்கு எதிரான போர் காரணமாக, உள்நாட்டு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஹவுதி கிளர்ச்சி குழுவிற்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஆலோசகர் கூறியதாக தெரிகிறது.
சவுதி பட்டத்து இளவரசரின் கோரிக்கை
இதனால் டொனால்ட் ட்ரம்ப் தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற திட்டத்தில் இருந்துள்ளார். பின்னர், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ட்ரம்பிற்கு தொலைபேசி அழைப்பு எடுத்து ஹவுதிக்கு எதிரான சண்டையில உதவி கேட்டுள்ளார்.

இதனால், பென்டகனை தொடர்பு கொண்ட ட்ரம்ப் ஏமனில் உள்ள ஹவுதியின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இராணுவ அதிகாரிகள் இலக்குகளை கண்டறிந்து, பின்னர் விமானத்தில் குண்டுகளை ஏற்றி தயாரான நிலையில் இருந்துள்ளனர்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்
அப்போது திடீரென தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இதனால் அமெரிக்க இராணுவம் தாக்குதலை நிறுத்தியுள்ளது.

முதலில் வேண்டாம், பின்னர் தாக்குதால் நடத்துங்கள், அதன்பின் வேண்டாம் என ட்ரம்ப் மூன்று முறை முடிவுகளை மாற்றியுள்ளார். ட்ரம்பின் இந்த மாற்றம் குறித்து வெள்ளை மாளிகை விரைவான விளக்கம் அளிக்கவில்லை.
ஈரான் உடனான சண்டை முடிவடையாத நிலையில், ஹவுதி இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் மற்றொரு மோதலுக்கு வழி வகுக்கும் என்பதால் ட்ரம்ப் முடிவை மாற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |