ஆபரேஷன் சிந்தூர் - நள்ளிரவில் பாகிஸ்தானில் நடந்ததென்ன : விளக்கும் பாக். பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் (operation sindoor) இராணுவ நடவடிக்கையின் போது நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பாகிஸ்தானுக்குள் உள்ள பிற இலக்குகளைத் இந்தியா தாக்கியதை பாகிஸ்தான் (Pakistan) பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நூர் கான் விமானப்படை (Pakistan Air Force Base Nur Khan) தளம் என்பது பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே அமைந்துள்ள முக்கியமான ராணுவ விமானப்படை தளமாகும்.
நூர் கான் விமானப்படை தளம்
இது கடந்த காலங்களில் பிரதமர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கான விமான பயணங்களுக்குப் பயன்பட்ட முக்கிய கட்டமைப்பாகும்.
இந்த தாக்குதல் உண்மையாக இருந்தால், அது 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட பலாக்கோட் தாக்குதலை தொடர்ந்து நடந்திருக்கும் மிகப்பெரிய தாக்குதல் என கருதப்படுகிறது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையின் போது இந்திய இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) தெரிவிக்கையில், இந்தியாவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் அதிகாலை 2:30 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதல்
இந்தியா (India) தனது பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகக் கூறினார். அதில் ஒன்று நாட்டின் மிக முக்கிய பகுதியான நூர் கான் விமானப்படை தளத்திலும், சில ஏவுகணைகள் மற்ற பகுதிகளிலும் தாக்கியதாகவும் பிரதமர் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மே 7 அன்று தொடங்கப்பட்ட பழிவாங்கும் இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் கீழ் இந்தியத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தற்போதைய பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் வழங்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் உள்ள சர்வதேச ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த தாக்குதலுக்கான ஆதாரங்களை உறுதிப்படுத்த முயற்சி செய்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
