ஜனாதிபதிக்கு எதிராக சிஐடி சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு
கொழும்பில் (Colombo) சற்றுமுன்னர் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் கொழும்பு, நாராஹென்பிட கிரிமன்டல மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிய முதலீடு
இந்த துப்பாக்கிச்சூட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷித ஹல்லோலுவ படுகாயமடைந்த நிலையில், அவரிடம் இருந்த முக்கியமான ஆவணங்கள் சிலவற்றையும் துப்பாக்கிதாரிகள் எடுத்துச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, அவரது வழக்கறிஞர் தினேஷ் தொடங்கொடவும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கிரீஸ் நாட்டில் பாரிய முதலீடு செய்துள்ளதாக சர்ச்சைக்குறிய கருத்தை துசித ஹல்லொலுவ வெளியிட்டிருந்தார்.
சிஐடியில் வாக்குமூலம்
இந்த கருத்து தொடர்டபாக கடந்த 15 ஆம் திகதி அவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாக துசித ஹல்லோலுவ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அவரது சட்டத்தரணி அகலங்க உக்வத்த ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த நான்காம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் அவர் சிஐடியில் வாக்குமூலம் வழங்கி விட்டு சென்றிருந்த நிலையில், தற்போது இனம் தெரியாத நபர்களால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
