விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பியதில் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு
Nuwara Eliya
Rain
Kelani Ganga
By Sindu
நுவரெலியா, நோர்ட்டன் ப்ரிட்ஜ் பகுதியில் இன்று (26) காலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.
நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதன் விளைவாக, களனி கங்கையில் கலக்கும் கெசல்கமு ஓயாவிலும், களனி கங்கையிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, இந்த ஆறுகளின் கரையோரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளிலும், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள், அடுத்த சில மணிநேரங்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |