வடகிழக்கு காணி அபகரிப்பு மீளப்பெறல் : வெளிவந்தது வர்த்தமானியின் பின்னணி
கடந்த 2025.03.28ஆம் திகதி, தமிழர் காணிகள் உரிமை கோரப்படாவிட்டால் அரச காணிகளாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் வர்த்தமானியொன்று வெளியாகி இருந்தது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் அரசியல் பரப்பில், மக்கள் மத்தியில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்த்தேசிய பரப்பில் அதிகம் பேசப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பின் மீதான மிகப்பெரும் ஆபத்தின் அறிகுறியாக விளங்கிய வடக்கின் கரையோரப் பகுதிகளை நிர்ணயம் செய்வதற்கான வர்த்தமானி இன்று மீளப்பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதன் அரசியல் பின்புலம் பற்றியும் காணி உரித்துக்களை இதுவரை பெறாதவர்கள் காணி உரிமங்களை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருபவர்களுள் ஒருவரான சட்டத்தரணி தனஞ்சயன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரேனியஸ் செல்வின் ஆகியோர் IBC தமிழின் முப்பரிமாணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த விடயதானம் மற்றும் இது தொடர்ந்து அவதானிக்கப்பட வேண்டிய பினபுலம் தொடர்பிலும் பேசியிருந்தனர்.
இது தொடர்பில் விவரிக்கிறது ஐபிசி தமிழின் முப்பரிமாணம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
