வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவை சந்தித்த ஜே.வி.பி
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரமுகர்களுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றையதினம் (05) இரவு இடம்பெற்றது.
நிரந்தர அரசியல் தீர்வு
நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாகவும், தேசிய மக்கள் சக்தியானது ஆட்சியமைக்கும் பட்சத்தில் அதன் நிலைப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பங்காளர் அமைப்பான AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, அழகுராசா மதன் ஆகியோரும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா, மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |