உளவு செயற்கைக்கோள் ஏவும் பணி - இரண்டாவது முறையாகவும் தோல்வியுற்ற வடகொரியா
அதிபர் கிம் ஜோங் - உன் தலைமையிலான வட கொரியாவில், மக்களின் வாழ்க்கைத் தரம் அதளபாளத்தில் விழுந்து வருகிறது.
ஆன போதும், அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட தனது எதிரி நாடுகளுக்கான, படைக்கலன்களை பெருக்குவது மற்றும் அச்சுறுத்தல் ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்வது என்பனவற்றில் வட கொரியா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், எதிரி தேசங்களை உளவு பார்ப்பதற்காக வட கொரியா திட்டமிட்டிருந்த உளவு செயற்கைக்கோள்களை ஏவும் பணி, இரண்டாவது முறையாக நேற்று(24) தோல்வியில் முடிந்தது.
முதலாவது உளவு செயற்கைக்கோள்

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை விண்ணிலிருந்து கண்காணிக்கவும் தனது எதிர்கால போர்த் தாக்குதல்களை வழிநடத்தவும், உளவு செயற்கைக்கோளை ஏவ முடிவு செய்தது.
அதன்படி மே மாதம் உளவு செயற்கைக்கோளை கட்டமைத்து விண்ணுக்கு ஏவிய போது, செயற்கைக்கோள் தாங்கிய ரொக்கெட், அதன் செயற்பாட்டில் தவறிதில் ஆரம்ப கட்டத்திலேயே கடலில் வீழ்ந்து மூழ்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.