மலசலகூடத்துடன் சுற்றித்திரியும் வடகொரிய அரச தலைவர் -அதன் இரகசியத்தை உடைத்த முன்னாள் படை வீரர்
வட கொரிய அரசதலைவர் கிம் ஜாங் உன்(Kim Jong Un), பிரத்தியேக போர்டபிள் கழிப்பறை ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும், எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அதை கையோடு எடுத்துச் செல்வார் எனவும், அதை யாராவது தொட்டாலே சுட்டுக் கொலை செய்துவிடுவார் எனவும் அந்நாட்டின் முன்னாள் கொமாண்டோ படை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வோஷிங்டன் போஸ்ட் ஊடக செய்தியாளரிடம் பேசியபோது, கிம் ஜாங் குறித்த பல ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ளதாவது,
கிம் ஜாங் உன், பொதுக் கழிவறைகளை பயன்படுத்துவதை சில காலமாகவே நிறுத்திவிட்டார். அவர் போர்டபிள் கழிப்பறை ஒன்றை வடிவமைத்து அதை மட்டும் தான் பயன்படுத்துகிறார். எந்த நாட்டுக்கு சென்றாலும் இதனை அவர் கையோடு தான் எடுத்துச் செல்வார். இதனை யார் பயன்படுத்தினாலும், தொட்டாலும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார். த
னது மலத்திலிருந்து தெரிந்துகொள்ளக் கூடிய தனது உடல்நலம் பற்றிய விஷயங்கள் வேறு யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு அவர் செய்கிறார். தனது மலம், தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டால், அதனால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என அவர் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
கிம் ஜாங் உன், தான் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலுமே விஷேச ஏற்பாடுகள், வசதிகளை செய்து வைத்திருக்கிறார். ஆனால் தற்போதெல்லாம், குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் காரை மட்டும் தான் அவர் பயன்படுத்துகிறார். அந்தக் காரிலும், போர்டபிள் கழிப்பறை பொருத்தப்பட்டுள்ளது.
கிம் ஜாங் உன்னுக்கு, உடல் எடை அதிகரித்துள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் 4 மடங்கு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். அவருடைய மலத்தில் இருந்து அவரின் உடல்நலன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இயலும். அவருக்கு ஏதேனும் தீவிரமான நோய் இருப்பதாக தெரியவந்தால், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அவரின் இமேஜ் பாதிப்படையலாம்.
அவரால் நீண்டகாலம் ஆட்சியில் இருக்க முடியாது என மக்கள் நினைக்கலாம்,
தன்னை ஒரு பவர்ஃபுல் மனிதர் என காட்டிக்கொள்ளும் கிம் ஜாங் உன், அதுபோன்ற ஒரு நிலை தனக்கு ஏற்படக் கூடாது என்ற எச்சரிக்கையின் காரணமாக கூட இப்படி நடந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.
