வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கண்டனம்
வட கொரியா நேற்று (30) நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானமான பி1-பி விமானமும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்திருந்தது.
தென்கொரியா - அமெரிக்க இராணுவ கூட்டுப்பயிற்சி
இந்நிலையில், தென்கொரியா - அமெரிக்க இராணுவ கூட்டுப்பயிற்சிக்கு பதிலடியாக, வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த ஏவுகணை, தென்கொரியாவின் கடற்கரை பகுதியில் விழுந்ததால் வடகொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தீர்மானங்களால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.