வடகொரிய எல்லைக்குள் அமெரிக்க ராணுவ வீரர் - வடகொரியா வெளியிட்ட காரணம்
North Korea
By pavan
வடகொரியா எல்லைக்குள் நுழைந்ததாக அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை வடகொரிய ராணுவம் கைது செய்துள்ளது.
டிராவிஸ்கிங் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
தென்கொரியாவில் இருந்த டிராவிஸ் கிங், அங்கு தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இரண்டு மாதம் இருந்தார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் வடகொரியா எல்லைக்குள் நுழைந்தார்.
அப்போது அவரை வடகொரியா ராணுவம் தடுத்து நிறுத்தி கைது செய்தது.
வடகொரிய ராணுவம்
எல்லை கிராமமான பன்முன்ஜோமிலுக்குள் அவர் நுழைந்த போதே வடகொரிய ராணுவம் அவரை கைது செய்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க படைகளின் கொரிய செய்தித் தொடர்பாளர் கர்னல் ஐசக் டெய்லர் கூறும்போது, டிராவிஸ் கிங், வேண்டுமென்றே மற்றும் அங்கீகாரம் இல்லாமல் எல்லையை தாண்டி சென்றுள்ளார் என்றார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி