வடக்கில் மேலும் 27 பேருக்கு கொவிட் தொற்று!
srilanka
covid-19
province
northern
By Vasanth
வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 20 பேர் யாழ். மாவட்டத்திலும், ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்திலும், 6 பேர் வவுனியா மாவட்டத்திலும்
கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்று யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 368 பேரின் மாதிரிகளும் யாழ். போதனா வைத்தியசாலையில் 20 பேரின் மாதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.