இன்று கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கின் புதிய ஆளுநர்..!
Jaffna
Government Of Sri Lanka
President of Sri lanka
Northern Province of Sri Lanka
By Pakirathan
புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றையதினம் திங்கட்கிழமை(22) நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது தடவையாக வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய ஆளுநர் நியமனம்

முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடந்த15ம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மே 17ஆம் திகதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி