உலகளவில் கண் சுகாதாரத்தில் வடமாகாணம் முன்னிலை : வைத்தியர் மலரவன் பகிரங்கம்
வடமாகாணம் கண் சுகாதாரத்தில் இலங்கையில் மட்டுமன்றி உலகளவில் முன்னிலையில் இருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் கண்மாற்று சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மலரவன் தெரிவித்துள்ளார்.
வெண்புரை சத்திர சிகிச்சை (Cataract surgery), கண்ணாடி பாவனை உள்ளிட்ட மூன்று விடயங்களில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முன்னிலை வகிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கண்வில்லையானது வயது மூப்பு காரணமாக பாதிக்கப்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்படுவதைக் வெண்புரை பிரச்சினை என குறிப்பிடலாம்.
யாழ்ப்பாணத்தில் தற்போது வெண்புரை சத்திரசிகிச்சைக்கு காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதேவேளை கண் சுகாதாரத்தில் பிரச்சினையுள்ள மாணவர்களில் அரைவாசிப்பேர் வைத்தியசாலைகளுக்கு வராமல் தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் வடமாகாணத்திலுள்ள பார்வைக் குறைபாடு உடைய பாடசாலை மாணவர்களை ஆசிரியர்களின் உதவியுடன் கண்டுபிடித்து 10,000 பேருக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.” என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
