யாழ் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவு சங்கங்கள் தொடர்பில் நடவடிக்கை!

srilanka meetings northernprovince
By Vasanth Mar 26, 2021 12:19 PM GMT
Report

யாழ் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவு சங்கங்களை மீள செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்றைய தினம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பொற்றுள்ளது.

கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மாவட்ட விவசாயிகள், மாவட்ட பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெரியவருகையில், அதேநேரத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களம், மாகாண விவசாய திணைக்களம், மற்றும் மிருக வைத்திய திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், சில மானியத் திட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

குறிப்பாக கிராமத்திலே 75 சதவீதமான மக்கள் வசித்து வருகின்ற நிலையில் அவர்களுடைய மனைப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்குரிய அரசாங்கத்தினுடைய கொள்கையின் அடிப்படையில் பல்வேறுபட்ட மானியத்திட்டங்கள் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல வங்கிகளுக்கு ஊடாகவும் பல்வேறுபட்ட இலகு கடன்கள், வட்டி குறைந்த அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விவசாயிகளுக்கு விளங்க படுத்தப்பட்டது

சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விவசாயிகளுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாகிய கட்டாக்காலி மாடுகள் ,விவசாய நிலங்கள் நிரப்பப்படுதல், அதேபோல விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்தல் கட்டிடங்கள் அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இன்றையதினம் ஆராயப்பட்டது அதற்கு விவசாய கமநலசேவை திணைக்களமும் பிரதேச செயலாளர்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு இணைந்து விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

கடந்த பெரும் போகத்தின் போதும் விவசாயிகள் எதிர்கொண்ட நஸ்ட விபரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது அதே நேரத்தில் அவர்களுக்குரிய தொழில்நுட்ப உதவிகள் மற்றும் கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் நடவடிக்கைகள் விவசாயிகளை சென்று சேர வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அரசாங்கத்தினால் ,விவசாய அமைச்சினால் அமுல்ப்படுத்தப்படுகின்ற பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் மூலம் விவசாயிகள் பயன்பெற வேண்டும் அதே நேரத்தில் ஏற்கனவே இயங்கி தற்போது செயல்பாட்டில் இல்லாத சில விவசாய கூட்டுறவு சங்கங்களையும் அவற்றைச் ஏற்படுத்தி அந்த சங்கங்கள் ஊடான பயன்கள் யாவும் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய குழு கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அதற்கு பொறுப்பான திணைக்களங்கள் செயற்பாட்டினை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் இன்று வரை தேசிய உர நிலைய அலுவலகம் ஒன்று இயங்காத நிலை காணப்பட்டது.

மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட விவசாய அமைச்சரின் கோரிக்கைக்கிணங்க அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே யாழ் மாவட்ட செயலகத்தில் அந்த அலுவலகம் இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இன்றைய விவசாய குழு கூட்டத்தில் மாவட்ட கமநல சேவைகள் பணிப்பாளர், மாகாண விவசாய பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், விதை உற்பத்தி திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026