இன்று முதல் வட மாகாணத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன (புகைப்படங்கள்)
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாவதையடுத்து வட மாகாணத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.
கடந்த மாதம் 21ம் திகதி தரம் 5 க்கு உட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் 8 ம் திகதி முதல் தரம் 11 இருந்து 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 129 பாடசாலைகளினதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 63 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் 5 இடைநிலைப்பிரிவு பாடசாலைகளினதும் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட 54 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் 7 இடைநிலைப்பிரிவு பாடசாலைகளினதுமாக மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 129 பாடசாலைகளினதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுமே இவ்வாறு இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகமளிப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது. பாடசாலை செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியமையானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


