வடக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவியேற்பு!
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
யாழ். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடமைகளை பொறுப்பேற்றார்
இந்த நிலையில் விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபராக கடமையாற்றி வந்த தினேஸ் கருணாநாயக்க வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

