புடினின் கடுமையான எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த நாடு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கடுமையான எச்சரிக்கைக்கு ஸ்வீடன் பயப்படாது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன்(Paul Johnson) தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நாடுகள் என்ற நிலையை கடந்து சர்வதேச போராக மாறிவருகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில், உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்வீடன் அளித்த பதில்
இதற்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யாவின் இந்த மிரட்டலுக்கு ஸ்வீடன் பயப்படாது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் நேற்று (22) தெரிவித்துள்ளார்.
நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்கு உக்ரைனுக்கு கணிசமான அளவு நிதியுதவியை ஸ்வீடன் அளிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்ட போதே அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
அத்துடன் உக்ரைனை ஆதரிப்பதில் இருந்து தங்களைப் பயமுறுத்தும் முயற்சிதான், ரஷ்யாவின் மிரட்டல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தும் முயற்சி தோல்வியடையும் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |