முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறக்கவும்மாட்டோம் மன்னிக்கவும்மாட்டோம்! அதிரும் கோசங்கள்
srilanka
mullivaikkal
genocide
By Vasanth
முல்லைத்தீவு நகரிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இறுதி யுத்தத்தின் போது உறவுகளை ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளித்த வட்டுவாகலூடாகவே தற்போது வாகனப் பேரணி சென்றுகொண்டிருக்கின்றது.
இதன் போது கேப்பாபுலவு எங்கள் சொத்து, வட்டுவாகல் எங்கள் உரிமை, இராணுவமே வெளியேறு, எமது நிலம், கடல் எமக்கு வேண்டும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறக்கவும்மாட்டோம் மன்னிக்கவும்மாட்டோம் என கோசங்கள் எழுப்பியவாறு பேரணி தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றது.
இதன் போது வீதியின் இருபுறமும் பொலிஸாரும், இராணுவத்தினரும் அதிகளவில் நின்றுகொண்டிருப்பதையும் காண முடிகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி