பினாமி நிறுவனங்களுக்கு தமிழர் நிலங்களை அபகரிக்கும் தமிழ் அமைச்சர்....!
கடற்தொழில் அமைச்சரின் பினாமியின் நிறுவனத்திற்காக பூநகரி கெளதாரிமுனையில் மக்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்படுகின்றன.
கிட்டத்தட்ட 100 ஏக்கர் காணியினை அமைச்சரின் பினாமியின் நிறுவனங்களான கனிரா சீ பூட் மற்றும் நோர்த் சீ பூட் பார்ம் ஆகிய நிறுவனங்கள் இறால் பண்ணை வைப்பதற்காக குறித்த காணிகள் அளவை செய்யப்படுகின்றது.
பினாமிகளின் பெயரில் தமிழர் தாயகங்களில் உள்ள எமது மக்களின் காணிகளையே அபரிக்கும் தமிழ் அமைச்சரால் எவ்வாறு தமிழர் நிலங்களில் நடைபெறும் பேரினவாத அத்துமீறல்களை தடுக்க முடியும்.
தமிழர் தாயகங்களில் தொல்பொருள் திணைக்களம் நடத்துகின்ற கெடுபிடிகளை தடுப்பதற்கு கடற்தொழில் அமைச்சர் ஒரு துளி முயற்சியும் எடுக்கவில்லை.
வெடுக்கு நாறி மலையில் உடைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்வதற்காக இரு தமிழ் அமைச்சர்கள் அங்கு சென்றிருந்தார்கள்.
பின்னர், குறித்த விடயம் சட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என நொண்டி காரணங்களை கூறி, சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு திரும்பி விட்டார்கள்.
இவர்களது காரணம் வேடிக்கையாக உள்ளது, உடைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் விக்கிரங்களை மீள வைப்பதற்கு எவ்வித சட்டத் தடைகளும் இருக்கவில்லை.
ஆலயப்பகுதியை சேதப்படுத்தினார்கள் எனும் வழக்கு மட்டுமே உள்ளது.
இரு தமிழ் அமைச்சர்களும் நினைத்தால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் விக்கிரங்களை மீள பிரதிஷ்டை செய்திருக்க முடியும்.
அமைச்சரவையில் தமிழ் அமைச்சர்கள் இருந்தால் அவர்கள் வெறும் சடப்பொருட்களாகவே இருக்க முடியும் என்பதற்கு இந்த இரு அமைச்சர்களும் சிறந்த உதாரணம்.
உடைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் விக்கிரங்களை கூட மீள வைக்க முடியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சர்கள் இவர்கள்.
அதில் ஒருவர் வட பகுதி அமைச்சர், பினாமியின் பெயர்களில் தமிழர் காணிகளை அபகரிக்கும் இவரால் எவ்வாறு தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல்களை தடுக்க முடியும்.
உண்மையில் இந்த அமைச்சர்கள் ஆடையுடன் தான் திரிகிறார்களா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
