அப்படி மோசமான சம்பவம் எதுவும் நடக்காது -அரசாங்கம் வெளியிட்ட தகவல்
children
corona vaccine
channa jeyasumana
By Sumithiran
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் இந்த நேரத்தில் பெற்றோர்களை அச்சுறுத்துவதற்காக பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அவர்களுக்கு மோசமான சம்பவம் எதுவும் நடக்காது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமண தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள சிறந்த குழந்தை மருத்துவர்கள் மூலம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து உலகில் நிலவும் உண்மைகளை ஆராய்ந்த பின்னரே இந்த தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது, 30 வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள்தொகையில் 98% முதல் 99% வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் தடுப்பூசி போடப்படாதவர்கள் தாமாக முன்வந்து அதனைப் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 20-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.