தமிழர் பகுதியில் பொது வேட்பாளரை ஆதரித்து துண்டுப்பிரசுர விநியோகம்!
Sri Lankan Tamils
Vavuniya
P Ariyanethran
Selvam Adaikalanathan
Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker
7 months ago
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா. அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது வவுனியா (Vavuniya) பழைய பேருந்து நிலைய பகுதியில் இன்று(28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
துண்டுப்பிரசுர விநியோகம்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,பொதுஅமைப்புக்கள், என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அண்மைய காலங்களில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 7 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்