யாழில் காணி உரிமையாளர்கள் சிலருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
Sri Lankan Tamils
Jaffna
Government Of Sri Lanka
By Thulsi
வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கணி உரிமையாளர்களுக்கு ஆதன வரி அறவிடல் தொடர்பாக வேலணை பிரதேச சபை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவு 3/17 இல் ஆதன வரி அறவிடல் செயற்பாடுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் (4ம் காலாண்டு) ஆரம்பிக்கவுள்ளது.
இதன்பிரகாரம் குறித்த பிரதேசத்தில் வாழும் காணி உரிமையாளர்கள் தமது காணி தொடர்பான பொருத்தமான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருப்பதுடன் காணிகளை துப்புரவு செய்து எல்லைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்