50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் வௌியான அறிவிப்பு
people
corona vaccine
over 500years
By Sumithiran
எதிர்காலத்தில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் தேவை ஏற்பட்டால் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டி ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் சினோபார்ம் தடுப்பூசி செலுத்திய இளம் வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 50 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டியது இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.