மாகாணங்களுக்கிடையில் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
bus
license
provincial
sri Lanka
By Kalaimathy
நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல், மாகாணங்களுக்கு இடையில் தொடருந்து மற்றும் பேருந்துச் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைக்கான அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தத் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.