அதிபர் தேர்தலுக்கு பின்னதான பொதுத்தேர்தல்: ரணிலின் கருத்து
2024 ஒக்டோபரில் அதிபர் தேர்தல்களுக்குப் பிறகு உடனடியாகவே ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அதிபர் தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்தலை அறிவிப்பதை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படுமென அவர் அமைச்சரவை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் வெற்றி
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதனடிப்படையில் 2024 ஜூலை 17 இற்கு பின்னர் செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் இடையே ஒரு நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படுவதை இலக்காகக் கொண்டு அதிபர் தேர்தலுக்கான பணிகளை தேர்தல்கள் ஆணையகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |