தலைவர் சிலை மற்றும் பல கதைகளுக்கு... PTA இல்லையா... !
2025 மே மாதத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற தரப்புகள், தத்தமது சபைகளில் அமர்ந்து இந்த மாதத்துடன் ஒரு வருடம் கடக்கிறது.
அநுரவின் ஆட்சியில் அவரது அரசாங்கத்தில் நடத்தப்பட்ட இந்த உள்ளூராட்சித் தேர்தல் களத்துக்காக, வடக்கில் ஜே.வி.பி மேற்பார்த்த தேசிய மக்கள் சக்தியும் சில பரப்புரைப்பாடல்களை ஒலிக்கவிட்டது.
அநுர தரப்பின் தேசிய மக்கள் சக்தி அதிகாரபூர்வமாகத் தமது லோகோ (Logo) எனப்படும் அடையாளத்தைப் பயன்படுத்திய இந்தப் பரப்புரைப் பாடலில் தேசியத் தலைவரின் வல்வெட்டித்துறை பூர்வீக வீடும் காணொளியாகக் காட்டப்பட்டு தேசிய மக்கள் சக்தியின் கொள்கையும் தலைவரின் கொள்கையும் ஒன்றே எனப் பாடப்பட்டது.
அத்துடன் தமக்கு வாக்களித்தால் தேசியத் தலைவரின் சிலையொன்று வைக்கப்படும், அவரது பெற்றோரான வேலுப்பிள்ளை - பார்வதியம்மா பெயரில் புதுத் துறைமுகம் அமையும், மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்படும் மற்றும் பராமரிக்கப்படும் என அந்தப் பாடலில் ஓர் ஆண்குரல் அடித்துவிட்டது.
இதற்கும் அப்பால் தற்போது அநுரவின் அமைச்சராக உள்ள சந்திரசேகரன் கூட தலைவருக்குச் சிலை வைப்பதாகச் சொன்ன விடயம் வேறு.
இவ்வாறான பாடல்கள் அநுர தரப்பின் தேசிய மக்கள் சக்தி அதிகாரபூர்வ லோகோவுடன் பயன்படுத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் இது என்ன டிசைன் ஆட்சியோ தெரியவில்லை இதேபோல ஒரு பாடலைப் பாடிய கிளிநொச்சிச் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ளேயுள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |