தவிசாளர் சுகிர்தனுக்கு எதிராக என்.பி.பி பெண் உறுப்பினர் முறைப்பாடு!
Jaffna
ITAK
National People's Power - NPP
By Theepan
யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேசிய மக்கள் சக்தியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் கோகுலன் சுரேகா வடக்கு மாகாண ஆளுநரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைக்கவசத்தால் தாக்க முயற்சி
வீதியின் சில பிழைகளை சுட்டிக்காட்டிய போது, தவிசாளர் அவதூறு வார்த்தைகளால் பேசி தன்னை தலைக்கவசத்தால் தாக்க முற்பட்டதாக குறித்த பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (22)தெல்லிப்பளை காவல் நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் கோகுலன் சுரேகா முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்