உயிரிழந்த இளம் எம்.பி - புரட்சிகர வணக்கம் - ஜனாதிபதி இரங்கல்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் கடந்த (6) மாரடைப்பு காரணமாக தமது 38 வயதில் காலமானார்.
கோசல நுவான் ஜயவீரவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், "பயணம் இப்போது தான் தொடங்கியுள்ளது." உங்களை இழந்தது மிகப்பெரிய இழப்பு, நீங்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். சகோதரர் கோசலா உங்களுக்கு புரட்சிகரமான வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் (Kosala Nuwan Jayaveera) திடீர் மரணத்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசியலமைப்பின் 66(அ) பிரிவின் விதிகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் பத்தாவது நாடாளுமன்றத்தில் ஒரு இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தின் பதில் பொது செயலாளர் சமிந்த குலரத்ன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
