சந்திக்க சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற கடற்றொழில் அமைச்சர்

Anura Kumara Dissanayaka Northern Province of Sri Lanka National People's Power - NPP Ramalingam Chandrasekar
By Sathangani Jun 01, 2025 08:08 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) சிந்தனைக்கு எதிர்மறையாக தேசிய மக்கள் சக்தி கட்சியினர் வடபகுதியில் இயங்குவதாக அந்தக் கட்சியின்  செயற்பாட்டாளரான பொன். சுதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) 2 மணிக்கு யாழ் அலுவலகத்திற்கு வரச்சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்தார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று (01.06.2025) சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க

தேசிய மக்கள் சக்தி

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தியின் உயர்ந்த கொள்கையானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உயரிய சிந்தனைக்குள்ளால் உதயமானது. ஆனால் குறிப்பாக வடபகுதியில் தேசிய மக்கள் சக்தி நடந்து கொள்ளும் விதமானது நேர் எதிராக காணப்படுகின்றது.

ஜனநாயகம் என்பது ஒரு சிறிதளவும் இருப்பதாக இல்லை. மக்களுடைய ஆணைக்கு எதிராக, ஜனநாயக விரோதமாக நடந்து கொள்ளும் போது இதனை நாங்கள் தட்டிக் கேட்க முனைந்தால் தேசிய மக்கள் சக்தியில் ஒரு தலைமைத்துவத்துடன் எமது பிரச்சினையை கரிசனையோடு கேட்பதற்கு ஒரு பண்புள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் இங்கில்லை.

சந்திக்க சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற கடற்றொழில் அமைச்சர் | Npp Operate North Opposition To Anura S Thinking

ஜனாதிபதியின் கொள்கையை ஏற்று, அவரது கருத்துக்களை நம்பித்தான் நாம் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணி புரிந்தோம். ஆனால் தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது.

இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன், அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன். நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் தன்னை சந்திப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார்.

தமிழ்த் தேசியத்தின் புதிய தலைமை..! முதியவர்கள் வழிவிடுங்கள் - வலுக்கும் கோரிக்கை

தமிழ்த் தேசியத்தின் புதிய தலைமை..! முதியவர்கள் வழிவிடுங்கள் - வலுக்கும் கோரிக்கை

படம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர்

தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு வாருங்கள், அங்கு நாம் மேற்கொண்டு கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

பிற்பகல் 2 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு சென்ற நான் மாலை 6 மணி கடந்தும் அமைச்சரை சந்திப்பதற்காக அங்கேயே காத்திருந்தேன்.

சந்திக்க சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற கடற்றொழில் அமைச்சர் | Npp Operate North Opposition To Anura S Thinking

2 மணிக்கு வருமாறு கூறிய அமைச்சர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது உதவியாளர்களிடம் பல முறை தெரிவித்தும் சந்திப்பதற்கு தான் வருவதாக கடைசிவரை அவர் கூறவில்லை. பின்பு அவர் இன்னொரு கலந்துரையாடலுக்கு சென்றுவிட்டதாக அழைப்பு வந்தது.

ஆனால் அமைச்சர் எங்கு சென்றார் என்பதனை தேடி அறிந்த போது யாழ் தியேட்டர் ஒன்றில் அந்த நேரத்தில் அமைச்சர் படம் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வாறு என்றால் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

கட்சிக்காக உங்களுக்காக உழைத்த ஒருவரை சந்திக்க அழைத்து விட்டு நீங்கள் படம் பார்க்க சென்றிருக்கிறீர்கள் என்றால் ஜனாதிபதியின் கருத்தியலுக்கு ஏற்ப மக்களுக்கு எவ்வாறு நீங்கள் சேவை செய்ய போகின்றீர்கள். கட்சிக்காக அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய எம்மையே அரவணைக்க தெரியாத நீங்கள் இந்த மக்களை எப்படி அரவணைக்க போகின்றீர்கள்?

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

மக்களின் கதி கேள்விக் குறி

எல்லோரையும் அரவணைத்து அன்பாக இனவாதம் இன்றி வழி நடத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்திய போதும் நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்திற்கு என்னை அழைத்து அமைச்சர் நடத்திய விதம் ஒரு வெறுப்பான உணர்வை தந்துள்ளது.

2 மணிக்கு அலுவலகம் சென்று 06 மணிக்கு பின்பு வீடு திரும்பும்வரை தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களால் தண்ணீர் கூட தரப்படவில்லை.

தமிழ், சிங்கள மக்களுக்கு இருக்க கூடிய மனித நேயம் தேசிய மக்கள் சக்திக்கு காணப்படவில்லை. ஆகவே தான் அலுவலகத்தில் பல மணி நேரம் இருந்த எனக்கு சொட்டு தண்ணீர் கூட தரவில்லை. கட்சிக்காக வேலை செய்த எங்களுக்கே இந்த நிலை என்றால் எதிர்காலத்தில் மக்களின் கதி கேள்விக் குறிதான்.

சந்திக்க சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற கடற்றொழில் அமைச்சர் | Npp Operate North Opposition To Anura S Thinking

ஜனாதிபதியின் எண்ணங்களுக்கு எதிராக மக்களின் ஆணைகளுக்கு எதிராக அநுரகுமார திசாநாயக்கவிற்கு துரோகம் செய்யும் வேலைகளில் வட பகுதி தேசிய மக்கள் சக்தியினர் செயற்படுகின்றனர். இது ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.

தேசிய மக்கள் சக்தியை வட பகுதியில் இவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி நினைக்கலாம். தேசிய மக்கள் சக்தியை அழிப்பதற்கு வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை உள்ளுக்குள் இருந்து சிதைப்பதற்கே இங்கு நிறைய பேர் இருக்கின்றனர்.

இந்த நிலை தொடருமாக இருந்தால் மிக விரைவில் தேசிய மக்கள் சக்தி வட பகுதியில் ஆட்டம் காணும் என்பதே என்னுடைய உறுதியான கருத்து. இதனை சரி செய்ய வேண்டும் என்றால் உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு ஊழல் கரங்களுடன் தேசிய மக்கள் சக்தியில் இருப்பவர்களை வெளியேற்றி நம்பி வாக்களித்த மக்களுக்கும், தேசிய மக்கள் சக்தியுடன் பயணித்தவர்களுக்கும் நீதியை வழங்க வேண்டும்“ என தெரிவித்தார்.

யாழ் மக்களே அவதானம்..! போதனா வைத்தியசாலை முன் நூதனமுறையில் கொள்ளை

யாழ் மக்களே அவதானம்..! போதனா வைத்தியசாலை முன் நூதனமுறையில் கொள்ளை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்