ஈழத்தில் பேசுபொருளாக மாறிய சீமான்...! நல்லூர் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரிய பதாகை
யாழ்ப்பாணத்தில் சீமானுக்குப் பாரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இந்தப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் 2026 ஏப்ரல் 23ஆம் திகதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
தேர்தல் களம்
இந்தத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தப் பதாகை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக அரசியல் மாற்றங்கள் மற்றும் தேர்தல் களம் குறித்து ஈழத் தமிழர்கள் எப்போதுமே மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக ஈழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழர் நலன் குறித்துத் தொடர்ந்து பேசி வரும் சீமானுக்கு வட இலங்கையில் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் குறித்த பதாகை பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

