இலங்கையில் மரபணுமாறிய கொரோனா - தொற்றாளர்களின் எண்ணிக்கை வெளிவந்தது
Covid-19
Patient
By Vasanth
இலங்கையில் மரபணு மாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சைப்ரஸ், டுபாய் மற்றும் ஜோர்தானில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களிடையே இந்த புதிய தொற்று கண்டறியப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட 16 பேரில் 13 பேர் இராணுவத்தின் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை கொழும்பு நகரில் வசிக்கும் ஒருவரிடமிருந்தும் புதிய தொற்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன, ஆனால் அது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.