நோயாளிகளை கவனிக்க ஆள் இல்லை : சேலை வியாபாரத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்
வைத்தியசாலையில் நோயாளிகளை கவனிக்க எவரும் இல்லாத நிலையில் அவர்கள் துடித்துக் கொண்டிருக்க தாதியர்களோ ஒன்றாக குழுமியிருந்து சேலை வியாபாரத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தமிழகம் அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏராளமான நோயாளிகள் பல்வேறு சிகிச்சைக்கு
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை முதலே ஏராளமான நோயாளிகள் பல்வேறு சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் பல மணிநேரமாகியும் மருத்துவரோ செவிலியர்களோ அவர்களுக்கு முதலுதவி செய்யக் கூட வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்த பெண் ஒருவர், செவிலியர்களை தேடிச்சென்ற போது, அவர்கள் அங்குள்ள அறையில் அமர்ந்து சேலை வியாபாரம் செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.
செல்போனில் அங்கு நடைபெறும் சம்பவத்தை
இதனால் அதிருப்தியடைந்த அந்த பெண், தனது செல்போனில் அங்கு நடைபெறும் சம்பவத்தை காணொளியாக எடுத்தார். அந்தப் பெண் காணொளி எடுப்பதை அறிந்த செவிலியர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர்.
இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மக்களுக்கு சேவை செய்வதற்கான செவிலியர் பணியில் இருந்து கொண்டு, அதுவும் அரசு வேலையில் இருந்து கொண்டு இத்தனை அலட்சியமாக இருந்த செவிலியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |