ஒரு நூற்றாண்டு காலமாக குழந்தையே பிறக்காத நாடு எது தெரியுமா! காரணம் இது தான்
பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு பாகத்திலும் மனிதனின் நிலைத்திருப்பிற்கு ஆதாரமாக இருக்கும் இந்த உலகிலுள்ள ஒரு நாட்டில் சுமார் 95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை தெரியுமா.
எந்த நாட்டில், ஏன் ஒரு நூற்றாண்டை நெருங்கும் காலம் வரை இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை, என்பனவற்றை தெரிந்துகொள்வோம்.
இந்த உலகின் சிறிய நாடுகளில் ஒன்றாகத் திகழும் ரோமின் வத்திக்கானில் தான் சுமார் 95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை
ரோமின்(Rome) வத்திக்கான் நகரம்(Vatican city), உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். இது 44 ஹெக்டேர் பரப்பளவில், 800க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
1929ம் ஆண்டு லேட்டரன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதில் இருந்து, இது ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிசயமான விடயம் என்னவென்றால், கடந்த 95 வருடங்களாக, அதாவது 1929ம் ஆண்டு முதல், வத்திக்கான் நகரில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை (No Child Births).
வத்திக்கான் நகர குடியுரிமை பெறுவதற்கு, ஒருவர் கத்தோலிக்க திருச்சபையில் பணிபுரியும் பாதிரியார் அல்லது துறவியாக இருக்க வேண்டும், இவ்வாறு குடியுரிமை பெறுபவர்களும் அவர்களது பதவிக்காலம் வரை மட்டுமே இந்த நாட்டில் வாழ முடியும்.
கருக்கலைப்புக்கு தடை
அதுமாத்திரமல்லாமல் இந்த வத்திக்கான் நகரில் மருத்துவமனை அல்லது பிரசவ மையம் எதுவுமே இல்லை, இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு அருகிலுள்ள ரோமின் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை நிலவி வருகிறது.
வத்திக்கான் நகரில் மருத்துவமனை இல்லாததற்கு அதன் சிறிய அளவு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தரமான மருத்துவ வசதிகள் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது, வத்திக்கான் நகரம் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை என்றும்.
இங்கு பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள் எதுவுமே இல்லை, ஆனால் வத்திக்கான் நகரம் கருத்தடை மற்றும் கருக்கலைப்புக்கு கடுமையான தடைகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |